நாம் அடையாளம் காணுகிறவர்கள் அவர்களுக்கான ஆதரவுநிதியை பெற்றுக்கொள்வதற்காக பெறப்படுகின்ற விபரங்கள் இந்த விண்ணப்பத்தில் பதிவுசெய்யப் படுகின்றன.

விண்ணப்பப் படிவம் :  form

* * *

  • நாட்டிலுள்ள எமது தொடர்பாளர்களினூடு ஆதரவுநிதியைப் பெறவேண்டியவர்கள் சிபாரிசு செய்யப்படுகின்றனர். விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்யப்படுவதோடு அத்தாட்சி பத்திரங்களும் பெறப்படுகின்றன.
  • இந்த விண்ணப்பங்கள் இங்கு (சுவிஸ்) எம்மால் பரிசீலிக்கப்படுகின்றன.
  • விண்ணப்பங்களை பெற்றுக்கொள்கின்ற ஒழுங்கில் அல்லாமல் அவசரமாக உதவிசெய்யப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் ஆதரவுநிதி அளிக்கப்படுகிறது. (இந்த நிதி அவர்களுக்கு -வங்கி இலக்கத்துக்கு- எம்மால் சுவிசிலிருந்து நேரடியாகவே அனுப்பப்படுகிறது.)
  • உடல் அங்கத்தை இழந்து வாழ்வாதாரத்துக்காக போராடுகிறவர்களுக்கான இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகிறபோது, முன்னாள் போராளிகளுக்கு – முக்கியமாக பெண்போராளிகளுக்கு- முதன்மை அளிக்கிறோம்.
  • எமது நிதிவளத்தைப் பொறுத்து விண்ணப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெறப்படுகிறது.