நாம் சுவிற்சர்லாந்தில் வசிக்கிறோம். எந்தக் கட்சியோ அமைப்போ அன்றி எந்த அதிகார சக்திகளோ சாராதவர்கள். ஒரு நண்பர் வட்டம். அவ்வளவுதான்.

ஈழப்போரின் அவலமான முடிவு பல்லாயிரக்கணக்கான மக்களை அநாதரவாக்கியதால் நாம் எம்மாலான உதவியையாவது (அது மிகச் சிறியதாய் இருப்பினும்கூட) வழங்க வேண்டும் என எண்ணினோம். அது எமது மனச்சாட்சிகளிலிருந்து கிளம்பிய ஒன்று. அது கொள்கை கோட்பாடு, அரசியல் உடன்பாடு உடன்பாடின்மை என்பதற்கும் அப்பாலானது. விளம்பரத்துக்கு ஒவ்வாதது.

அதனால் இன்னொரு அமைப்பினூடோ, சக்திகளினூடோ அல்லது ‘உதவி வழங்கும்’ நிறுவனங்களினூடோ நாம் செயற்படுவதாயில்லை. நாம் வழங்கும் உதவிகள் சிறிதாக இருப்பினும் அவை பாதிக்கப்பட்டவரை நேரடியாகவே போய்ச் சேரவேண்டும் என்பது எமது முக்கியமான முடிவு. அத்தோடு, நிர்வாக வேலைகளில் ஈடுபடுபவர்கள் -செலவு என்று வருகிறபோது- அவரவரே தனிப்பட அதனைப் பொறுப்பேற்பதன் மூலம் ஆதரவுநிதி விரயமாகாமல் பார்த்துக் கொள்கிறோம்.

நாம் புகலிடத்தில் இருப்பதால் அதை சாத்தியப்படுத்த நாட்டிலுள்ள ஒருசில நம்பிக்கையானவர்களினூடு தகவல் சேரிப்பையும் தொடர்புகளையும் பெற்றுக்கொண்டு செயற்படுகிறோம். (அவர்களது சேவையையும் அர்ப்பணிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்).

பயனாளர்களுக்கு நேரடியாகவே நாம் இங்கிருந்து ஆதரவுநிதியை அவரவர் வங்கி இலக்கத்துக்கு அனுப்புகிறோம்.

போரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிற அங்கங்களை இழந்து அவதியுறுகிறவர்களையே நாம் முதன்மையாகக் கவனத்தில் எடுத்துச் செயற்படுகிறோம்.

பாதிப்படைந்தவர்களுக்கு ஒரு சுயதொழிலைத் தொடங்க உதவுவதே எமது ஒரே நோக்கம். அதன்மூலம் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை தாமே உருவாக்கி வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் ஆகும்.

இந்தப் பங்களிப்பில் நீங்களும் இணைய விரும்பினால் எம்முடன் தொடர்புகொள்ளலாம்.

076 388 08 24  நிமலதாஸ் (S.Nimaladas)

076 343 59 23  ராஜன் (T.Karunakaran)

079 330 61 68  ரவி (P.Ravindran)

* * *

VEREINSSATTUTEN

Vereinssattuten Swiss – Tamil Relief and Aid Society per 08.09.2013

*

GRUENDUNGSPROTOKOLL

Gründungsprotokoll – Tamil Relief and Aid Society per 08.09.2013

* * *

aatharavu