குரல்

front cover-2019

உங்கள் சிறு உதவி

பெரும் மாற்றத்தை

இவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும்.


பகிர்ந்து வாழ்வோம்-கணக்கு விபரம்

கொரோனா நிலைமையால் தவிர்க்க முடியாமல் வாழ்வாதாரத் தேவையை கவனத்தில் எடுத்து “ஆதரவு” அமைப்பானது மலையகத்தில் இயங்கும் “தனித்துவாழும் தாய்மார்களுக்கான அமைப்பு” உடன் சேர்ந்து இக் குறித்த பணியை முன்னெடுத்தது.

மூன்றாம் நான்காம் ஐந்தாம் கட்ட பணிகளின் கணக்கு விபரம் இங்கு முன்வைக்கப்படுகிறது.

(( இந்தப் பணியின் முதல் இருண்டு கட்ட பணிகளுக்கான கணக்கு விபரம் பொதுவெளியில் (aatharavu.com -பகிர்ந்து வாழ்வோம்-2 ) ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருக்கிறது))

மிக நேர்த்தியாக இப் பணியை செய்து முடித்த “தனித்துவாழும் தாய்மார்கள்-மலையகம்” க்கான அமைப்பின் தோழர்கள் சந்திரலேகா, கிங்ஸ்லி இருவருக்கும் எமது நன்றிகள்.

கணக்கு விபரம் (click page-2)

பகிர்ந்து வாழ்வோம்-5

கொரோனா நிலைமையால் தவிர்க்க முடியாமல் வாழ்வாதாரத் தேவையை கவனத்தில் எடுத்து “ஆதரவு” அமைப்பானது மலையகத்தில் இயங்கும் “தனித்துவாழும் தாய்மார்களுக்கான அமைப்பு” உடன் சேர்ந்து இக் குறித்த பணியை முன்னெடுக்கிறது. (தனித்துவாழும் தாய்மார்களுக்கும், பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் -மலையகத்தில் வாழும் எல்லா இனத்தவருக்குள்ளும்- முன்னுரிமை கொடுக்கிறோம்.)

ஐந்தாம் கட்டப் பணிகள் பற்றிய விபரம். (click page-2)

பகிர்ந்து வாழ்வோம்-4

கொரோனா காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் மலையகத்தில் அன்றாட வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்துக்கு நெருக்கடி தொடர்ந்து வருகிறது. “ஆதரவு -சுவிஸ்” (aatharavu.com) அமைப்பும் “தனித்துவாழும் தாய்மார்களுக்கான அமைப்பு (மலையகம்)” உம் இணைந்து தம்மால் இயன்றளவு கட்டம் கட்டமாக ஆதரவுப் பணியை மேற்கொள்வதை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்.

அப் பணியின் நான்காவது கட்டமாக,

*22.04.2020 அன்று வட்டவளை பிரதேசத்திலும்

* 24.04.2020 அன்று நுவரெலியா ஒலிபன்ற் எஸ்ரேற்றிலும்

செய்து முடிக்கப்பட்டுள்ளது. (click page-2)

பகிர்ந்து வாழ்வோம்-3

“ஆதரவு அமைப்பு” (சுவிஸ்) உம், “தனித்துவாழும் தாய்மாருக்கான அமைப்பு” (மலையகம்) உம் மலையகத்தில் இணைந்து அவசரகால உணவுப் பொருட்களின் பொதி வழங்கலை மூன்றாவது கட்டமாக தொடங்கியுள்ளது. நேற்று ராகல இலும் இன்று மஸ்கெலியாவிலும் இப் பணி செய்துமுடிக்கப் பட்டிருக்கிறது. இம்முறை உணவுப் பொருள் பொதிகளுடன் விதைகளும் சேர்த்து வழங்கியிருக்கிறோம் (click page-2)

பகிர்ந்து வாழ்வோம்-2

மலையகத்துக்கான இரண்டாம் கட்ட பணி முடிவடைந்திருக்கிறது. ஊரடங்கு நிலைமையால் தினக்கூலிகளாக இருந்த மலையக மக்களின் வாழ்வாதாரம் நொருங்கிப்போனதால் அதற்கு எம்மாலான சிறு ஆதரவை மற்றைய மனிதநேயர்கள் போன்று நாமும் செய்ய முன்வந்திருந்தோம். கடந்த ஆறு வருடங்களாக வன்னி மட்டக்களப்புப் பிரதேசங்களில் முன்னாள் போராளிகளில் ஒரு சிறு பகுதியினரின் சுயதொழிலுக்கான முதலீடுகளை செய்து வருகிறது எமது “ஆதரவு” அமைப்பு (aatharavu.com).

(click page-2)

பகிர்ந்து வாழ்வோம்

  • april 2020

இலங்கையின் இயற்கை அழகின் திரட்சி மலையகம். அதை இப்படியான செழிப்பு பூமியாய் மாற்றி இலங்கையின் அந்நியச் செலாவணியின் முக்கால் பங்கிற்கு மேலான வருமானத்தை ஈட்டித்தருகிற அந்தப் பூமியின் மக்கள் காலாகாலமாகவே திட்டமிடப்பட்ட விதத்தில் ஏழையாக, விளம்புநிலை மக்களாக வைக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள். (click page-2)

☑ உதவி-1

வன்னியில் பாடசாலைக்கு செல்வதிலுள்ள தூரத்தை கருத்திற் கொண்டு ஆறு பாடசாலை பிள்ளைகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் கொடுக்கப்பட்டன.

☑ குரல்-53 (P.P)

P.P
அக்கராயன்

☑ குரல்-52 (R.M)

R.M
கிளிநொச்சி

☑ குரல்-51 (T.K)

T.K
மட்டக்களப்பு